மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட நடுவர்கள் சங்கம் நடத்திய மாபெரும் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி
மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட நடுவர்கள் சங்கம் மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கம், காத்தான்குடி கால்பந்தாட்ட லீக், ஓட்டமாவடி கால்பந்தாட்ட லீக், படுவான்கரை கால்பந்தாட்டக் குழு ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ள கால்பந்தாட்டக் கழகங்களை உள்ளடக்கிய மாபெரும் அணிக்கு ஏழு வீரர்கள் பங்குபற்றும் விலகல் முறையிலான கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியை மட்டுநகரிலுள்ள சீலாமுனை யங்ஸ்டார் மைதானம், மட்டிக்களி கதிரொளி மைதானம், முகத்துவாரம் லைற்ஹவுஸ் மைதானம், திராய்மடு ஸ்ரீ கிருஷ்ணா மைதானம் முதலியவற்றில் ஏக காலத்தில் நடத்தியிருந்தது.
போட்டிகளைத் திட்டமிட்டவாறு
நடத்தி முடிப்பதற்கு காலநிலை இடங்கொடுக்காத நிலையிலும் சில நாட்கள் பிந்தி இப்போட்டிகள் சிப்பாக நடந்தேறியுள்ளன.
ஐம்பதுக்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றிய சுற்றுப் போட்டியில் காலிறுதிவரை புனித இக்னேசியஸ், லைற்ஹவுஸ்,ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி, டிஸ்கோ,நியுகிறீன் லைட், பதுறியா, இராமகிருஸ்ணா, ஸ்ரீ முருகன் கழக அணிகள் முன்னேறியிருந்தன.
கடந்த திங்கட்கிழமை(22.05.2023) பிற்பகல் முகத்துவாரம் லைற்ஹவுஸ் மைதானத்தில் மின்னொளியில் காலிறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டி
என்பன நடைபெற்றன.
அதிகளவான கால்பந்து இரசிகர்கள் இப்போட்டிகளைக்
கண்டு களித்தனர்.
மட்டக்களப் கால்பந்தாட்ட நடுவர்கள் சங்கத் தலைவர் திரு தே.காந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு வைபவத்தில் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு வே.ஈஸ்பரன் அவர்களும் மட் மாவட்ட கால்பந்தாட்டச்
சங்கத்தின் நிருவாகிகளும்,
படுவான்கரை கால்பந்தாட்டக்
குழுவின் நிருவாகிகளும்,
லைற்ஹவுஸ் கழக நிருவாகிகளும் அதிதிகளாகக் கலந்து பரிசில்களை வழங்கி வீரர்களைப் பாராட்டினர்.
இச்சுற்றுப் போட்டியில் புனித இக்னேசியஸ் கழகம் சம்பியனாகவும் லைற்ஹவுஸ் கழகம் இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.
மூன்றாமிடத்தை
ஏறாவூர் வை.எஸ். எஸ்.சி கழகம் பெற்றுக் கொண்டது.
து.கெளரீஸ்வரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக