இடுகைகள்

பத்மநாபா ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்திற்கான கால்பந்து போட்டிகள் பற்றிய அறிவித்தல்

படம்
மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் அனுமதியுடன் பாடுமீன் பொழுது போக்குக் கழகத்தினால் நடத்தப்பட்டு வரும் பத்மநாபா ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்திற்கான கால்பந்து போட்டி கள் மட்டு வெபர் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இச்சுற்றின் காலிறுதிப் போட்டி, அரையிறுதிப் போட்டி, மூன்றாமிடத்தைத் தெரிவு செய்வதற்கான போட்டி, இறுதிப் போட்டி என்பன நடைபெறும் திகதிகள் மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் சுற்றுப்போட்டிக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மூன்றாவது காலிறுதிப் போட்டி எதிர்வரும் 19.06.2023 ஆந் திகதி திங்கட்கிழமை ஜெகன் விளையாட்டுக் கழகத்திற்கும் விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்திற்கும் இடையில் மட்டு வெபர் மைதானத்தில் பிற்பகல் 03:30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி ஏற்கெனவே அரையிறுதிக்குத் தேர்வாகியுள்ள யங்ஸ்டார் அணியுடன் முதலாவது அரையிறுதிப் போட்டியில் எதிர்வரும் 22.06.2023 ஆந் திகதி மட்டு வெபர் மைதனத்தில் பிற்பகல் 03:30 மணிக்குப் போட்டியிடும். நான்காவது காலிறுதிப் போட்டி எதிர்வரும் 20.06.2023 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகத்...

பத்மநாபா வெற்றிக் கிண்ணத்திற்கான கால்பந்தாட்டச் சுற்றில் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ள மட்டுநகர் யங்ஸ்டார், முதலைக்குடா விநாயகர்

படம்
மட்டக்களப்பு மாவட்டக் கால்பந்தாட்டச் சங்கத்தின் அனுமதியுடன் மட்டுநகர் பாடுமீன் பொழுது போக்குக் கழகம் நடத்தும் பத்மநாபா ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்திற்கான மாபெரும் கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டி மட்டு வெபர் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.  இச்சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்திலும், படுவான்கரை கால்பந்தாட்டச் சங்கத்திலும் அங்கத்துவம் பெற்றுள்ள கழகங்கள் பங்குபற்றுகின்றன.  மட்டக்களப்பு மாவட்டக் கால்பந்தாட்டச் சங்கத்தின் சுற்றுப் போட்டிக் குழுவின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட மத்தியஸ்தர்கள் சங்கத்தின் ஆதரவுடன் இப்போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றன.  இச்சுற்றின் முதலாவது காலிறுதிப் போட்டி கடந்த 08.06.2023 ஆந் திகதி பிற்பகல் மட்டு வெபர் அரங்கில் மட்டுநகர் யங்ஸ்டார் கழகத்திற்கும் மாமாங்கம் ரெட்ணம் கழகத்திற்கும் இடையிலான போட்டியாக நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு பேறினைப் பெற்றிருந்த நிலையில் தண்டனை உதை மூலமாக வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது இதில் மட்டுநகர் யங்ஸ்டார் கழகம் வெற்...

கல்லடி கடல்மீன்கள் கழகம் நடத்திய கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் முதலாம் இரண்டாம் இடங்களை ஏறாவூர் இளந்தாரகை கழகம் வெற்றி கொண்டது.

படம்
  மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் அனுமதியுடனும் மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட மத்தியஸ்தர்கள் சங்கத்தின் ஆதரவுடனும் கல்லடி கடல் மீன்கள் விளையாட்டுக் கழகம் நடத்திய அணிக்கு ஏழு வீரர்கள் பங்குபற்றும் விலகல் முறையிலான மாபெரும் கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டி கடந்த ஜூன் 09,10,11 .2023 ஆந் திகதிகளில் கல்லடியிலுள்ள மைதானத்தில் பகல் இரவுப் போட்டியாக நடைபெற்றிருந்தது .  இதில் மட்டக்களப்பு மாவட்டக் கால்பந்தாட்டச் சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள கழகங்களின் அணிகளும் , காத்தான்குடி கால்பந்தாட்ட லீக்கில் அங்கத்துவம் பெற்றுள்ள கழகங்களின் அணிகளும் , படுவான்கரை கால்பந்தாட்டச் சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள கழகங்களின் அணிகளும் எனமொத்தம் எழுபது அணிகள் பங்குபற்றியிருந்தன .  இம்மாபெரும் சுற்றுப் போட்டியின் அரையிறுதிக்கு மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள   ஏறாவூர் இளந்தாரகைக் கழகத்தின் ஏ , பி அணிகளும் கல்லடி ஸ்ரீ முருகன் கழக அணியும் , சீலாமுனை யங்ஸ்டார் கழ...

மட்டுநகர் ஈஸ்டன் ஸ்டார் வெற்றிக்கிண்ணத்தை வென்ற ஏறாவூர் இளந்தாரகை

படம்
  மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் அனுமதியோடும் மட்டக்களப்பு கால்பந்தாட்ட நடுவர்கள் சங்கத்தின் ஆதரவுடனும் மட்டுநகர் இருதயபுரம் ஈஸ்டன் ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடத்திய அணிக்கு ஏழு வீரர்கள் பங்குபற்றும் விலகல் முறையிலான மாபெரும் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி கடந்த ஜூன்   03,04. 2023 ஆந் திகதிகளில் இருதயபுரம் ஈஸ்டன் ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது .  இச்சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள கழகங்களின் அணிகள் பங்குபற்றியிருந்தன . இதில் அரையிறுதிப் போட்டிகளுக்கு ஏறாவூர் இளந்தாரகை கழகத்தின் இரு அணிகளும் , கூளாவடி டிஸ்கோ கழக அணியும் சுவிஸ் லயன் கழக அணியும் முன்னேறியிருந்தன . இறுதிப் போட்டியில் ஏறாவூர் இளந்தாரகை கழகத்தின் ஏ அணியும் டிஸ்கோ அணியும் தேர்வாகியிருந்தன . இறுதிப் போட்டியில் ஏறாவூர் இளந்தாரகை கழகத்தின் ஏ அணி 1:0 எனும் பேறினால் வெற்றி பெற்று இருதயபுரம் ஈஸ்டன் ஸ்டார் வெற்றிக்கிண்ணத்தை வென்றது .  டிஸ்கோ கழகம் ...

மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட நடுவர்கள் சங்கம் நடத்திய மாபெரும் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

படம்
மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட நடுவர்கள் சங்கம் மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கம் , காத்தான்குடி கால்பந்தாட்ட லீக் , ஓட்டமாவடி கால்பந்தாட்ட லீக் , படுவான்கரை கால்பந்தாட்டக் குழு ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ள கால்பந்தாட்டக் கழகங்களை உள்ளடக்கிய மாபெரும் அணிக்கு ஏழு வீரர்கள் பங்குபற்றும் விலகல் முறையிலான கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியை மட்டுநகரிலுள்ள சீலாமுனை யங்ஸ்டார் மைதானம் , மட்டிக்களி கதிரொளி மைதானம் , முகத்துவாரம் லைற்ஹவுஸ் மைதானம் , திராய்மடு ஸ்ரீ கிருஷ்ணா மைதானம் முதலியவற்றில் ஏக காலத்தில் நடத்தியிருந்தது .  போட்டிகளைத் திட்டமிட்டவாறு நடத்தி முடிப்பதற்கு காலநிலை இடங்கொடுக்காத நிலையிலும் சில நாட்கள் பிந்தி இப்போட்டிகள் சிப்பாக நடந்தேறியுள்ளன .  ஐம்பதுக்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றிய சுற்றுப் போட்டியில் காலிறுதிவரை புனித இக்னேசியஸ் , லைற்ஹவுஸ் , ஏறாவூர் வை . எஸ் . எஸ் . சி , டிஸ்கோ , நியுகிறீன் லைட் , பதுறியா , இராமகிருஸ்ணா , ஸ்ரீ முருகன் கழக அணிகள் முன்னேறியிருந்தன . கடந்த திங்கட...