பத்மநாபா வெற்றிக் கிண்ணத்திற்கான கால்பந்தாட்டச் சுற்றில் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ள மட்டுநகர் யங்ஸ்டார், முதலைக்குடா விநாயகர்

மட்டக்களப்பு மாவட்டக் கால்பந்தாட்டச் சங்கத்தின் அனுமதியுடன் மட்டுநகர் பாடுமீன் பொழுது போக்குக் கழகம் நடத்தும் பத்மநாபா ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்திற்கான மாபெரும் கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டி மட்டு வெபர் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. 

இச்சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்திலும், படுவான்கரை கால்பந்தாட்டச் சங்கத்திலும் அங்கத்துவம் பெற்றுள்ள கழகங்கள் பங்குபற்றுகின்றன. 

மட்டக்களப்பு மாவட்டக் கால்பந்தாட்டச் சங்கத்தின் சுற்றுப் போட்டிக் குழுவின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட மத்தியஸ்தர்கள் சங்கத்தின் ஆதரவுடன் இப்போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 

இச்சுற்றின் முதலாவது காலிறுதிப் போட்டி கடந்த 08.06.2023 ஆந் திகதி பிற்பகல் மட்டு வெபர் அரங்கில் மட்டுநகர் யங்ஸ்டார் கழகத்திற்கும் மாமாங்கம் ரெட்ணம் கழகத்திற்கும் இடையிலான போட்டியாக நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு பேறினைப் பெற்றிருந்த நிலையில் தண்டனை உதை மூலமாக வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது இதில் மட்டுநகர் யங்ஸ்டார் கழகம் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுக் கொண்டது.

இரண்டாவது காலிறுதிப் போட்டி கடந்த 13.06.2023 ஆந் திகதி பிற்பகல் மட்டு வெபர் அரங்கில் முகத்துவாரம் லைற்ஹவுஸ் கழகத்திற்கும் முதலைக்குடா விநாயகர் கழகத்திற்கும் இடையிலான போட்டியாக நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 2:1 எனும் பேறினால் முதலைக்குடா விநாயகர் கழகம் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுக் கொண்டது.

 

கருத்துகள்