மட்டுநகர் ஈஸ்டன் ஸ்டார் வெற்றிக்கிண்ணத்தை வென்ற ஏறாவூர் இளந்தாரகை
மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் அனுமதியோடும் மட்டக்களப்பு கால்பந்தாட்ட நடுவர்கள் சங்கத்தின் ஆதரவுடனும் மட்டுநகர் இருதயபுரம் ஈஸ்டன் ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடத்திய அணிக்கு ஏழு வீரர்கள் பங்குபற்றும் விலகல் முறையிலான மாபெரும் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி கடந்த ஜூன் 03,04. 2023 ஆந் திகதிகளில் இருதயபுரம் ஈஸ்டன் ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இச்சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட
கால்பந்தாட்டச் சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள கழகங்களின் அணிகள்
பங்குபற்றியிருந்தன.
இதில் அரையிறுதிப் போட்டிகளுக்கு ஏறாவூர் இளந்தாரகை கழகத்தின் இரு
அணிகளும், கூளாவடி டிஸ்கோ
கழக
அணியும் சுவிஸ்
லயன்
கழக
அணியும் முன்னேறியிருந்தன. இறுதிப் போட்டியில் ஏறாவூர் இளந்தாரகை கழகத்தின் ஏ
அணியும் டிஸ்கோ
அணியும் தேர்வாகியிருந்தன. இறுதிப் போட்டியில் ஏறாவூர் இளந்தாரகை கழகத்தின் ஏ
அணி
1:0 எனும்
பேறினால் வெற்றி
பெற்று
இருதயபுரம் ஈஸ்டன்
ஸ்டார்
வெற்றிக்கிண்ணத்தை வென்றது. டிஸ்கோ கழகம்
இரண்டாம் இடத்தையும் சுவிஸ்
லயன்
கழகம்
மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
மட்டுநகரில் அதிகளவான கால்பந்தாட்ட இரசிகர்கள் மத்தியில் நடைபெற்ற இச்சுற்றுப் போட்டியை ஒழுங்கமைத்து நடத்திய ஈஸ்டன்
ஸ்டார்
கழகமும் அனுசரணையாளர்களும் போட்டிகளுக்கு நடுவர்களாகப் பணியாற்றிய கால்பந்தாட்ட நடுவர்கள் சங்க
அங்கத்தவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
இச்சுற்றுப் போட்டியில் பங்குபற்றிய ஏறாவூர் இளந்தாரகை வீரர்களின் கால்பந்தாட்ட ஆற்றல்களும் டிஸ்கோ
கழக
வீரர்களின் ஆற்றல்களும் மெச்சத்தக்கதாக இருந்ததாகப் பல
இரசிகர்கள் தெரிவித்தனர்.
து.கௌரீஸ்வரன்
05.06.2023

கருத்துகள்
கருத்துரையிடுக