பத்மநாபா ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்திற்கான கால்பந்து போட்டிகள் பற்றிய அறிவித்தல்


மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் அனுமதியுடன் பாடுமீன் பொழுது போக்குக் கழகத்தினால் நடத்தப்பட்டு வரும் பத்மநாபா ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்திற்கான கால்பந்து போட்டிகள் மட்டு வெபர் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

இச்சுற்றின் காலிறுதிப் போட்டி, அரையிறுதிப் போட்டி, மூன்றாமிடத்தைத் தெரிவு செய்வதற்கான போட்டி, இறுதிப் போட்டி என்பன நடைபெறும் திகதிகள் மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் சுற்றுப்போட்டிக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி மூன்றாவது காலிறுதிப் போட்டி எதிர்வரும் 19.06.2023 ஆந் திகதி திங்கட்கிழமை ஜெகன் விளையாட்டுக் கழகத்திற்கும் விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்திற்கும் இடையில் மட்டு வெபர் மைதானத்தில் பிற்பகல் 03:30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி ஏற்கெனவே அரையிறுதிக்குத் தேர்வாகியுள்ள யங்ஸ்டார் அணியுடன் முதலாவது அரையிறுதிப் போட்டியில் எதிர்வரும் 22.06.2023 ஆந் திகதி மட்டு வெபர் மைதனத்தில் பிற்பகல் 03:30 மணிக்குப் போட்டியிடும்.

நான்காவது காலிறுதிப் போட்டி எதிர்வரும் 20.06.2023 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகத்திற்கும் ஈஸ்வரா விளையாட்டுக் கழகத்திற்கும் இடையில் மட்டு வெபர் மைதானத்தில் பிற்பகல் 03:30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி ஏற்கெனவே அரையிறுதிக்குத் தேர்வாகியுள்ள விநாயகர்; அணியுடன் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் எதிர்வரும் 23.06.2023 ஆந் திகதி மட்டு வெபர் மைதனத்தில் பிற்பகல் 03:30 மணிக்குப் போட்டியிடும்.

எதிர்வரும் 25.06.2023 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 02:00 மணிக்கு அரையிறுதியில் தோல்வியடைந்த அணிகளிலிருந்து மூன்றாவது இடத்தைப் பெறும் அணியைத் தெரிவு செய்வதற்கான போட்டி நடைபெறவுள்ளதுடன், 

மாபெரும் இறுதிப் போட்டி 25.06.2023 ஆந் திகதி பி.ப 03:30 மணிக்கு மட்டு வெபர் மைதானத்தில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்மநாபா வெற்றிக் கிண்ணத்திற்கான கால்பந்தாட்டச் சுற்றில் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ள மட்டுநகர் யங்ஸ்டார், முதலைக்குடா விநாயகர்